இந்த புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவியின் மூலம் நீங்கள் பெறக்கூடிய வசதிகள் பின்வருமாறு:

  • தமிழ்மணத்தின் கருவிப்பட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • நாளும் நேரமும் தமிழில் காட்டலாம்.
  • தேன்கூட்டின் பின்னூட்டச் சேகரிப்பானைச் சேர்க்கலாம்
  • யாகூ சிரிப்பான்களைப் பதிவில் தெரியச் செய்யலாம்.

மேற்கண்ட வசதிகளைப் பெற நீங்கள் செய்யவேண்டியது:

  • 1. தங்கள் புது ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”).
  • 2. மேம்படுத்த விரும்பும் பதிவைத் தேர்வு செய்க.
  • 3. ஆதாரக்கிடப்புகளை முகாமைப்படுத்து (“Manage Layouts”) பகுதிக்குச் செல்க (இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).
  • 4. மீயுரை சீர்திருத்து (“Edit HTML”) என்கிற பகுதிக்குச் செல்க.
  • 5. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க.
    அடுத்தது மிக முக்கியமான ஒன்று
  • 6. சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற சொடுக்குப் பெட்டியை தேர்வு செய்க.
  • 7. சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் உள் வைத்து எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து கீழிருக்கும் பெட்டியில் past செய்யவும். [படம் பெரிதாக தெரிய படத்தின் மேல் சொடுக்கவும்]


    தமிழ்மண கருவிப்பட்டையை சேர்க்க முன்னால் உள்ள கட்டத்தில் தேர்ந்தெடுக்கவும்
    புது ப்ளாக்கர் பதிவுகளில் நேரமும் காலமும் தமிழில் தெரியச் செய்யும் ஜெகத்தின்
    நிரலியை இணைக்க முன்னால் உள்ள கட்டத்தில் தேர்ந்தெடுக்கவும்
    தேன்கூட்டின் பின்னூட்டம் சேகரிப்பானைச் சேர்க்க
    யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டும் தீபாவின் நிரல்துண்டைச் சேர்க்க.

  • 8. "வார்ப்புருவை மேம்படுத்து" என்ற பொத்தானை அழுத்தியவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரலித் துண்டுகள் உங்கள் அடைப்பலகை நிரலியில் இணைக்கப்பட்டு மேலே உள்ள பெட்டியில் தெரியும்.
  • 9.மேலே உள்ள பெட்டியில் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து அதை உங்கள் சீர்திருத்துபெட்டி(“EditBox”) பெட்டியில் உள்ளவற்றை நீக்கிவிட்டு paste செய்யவும்.
  • 10.அடைப்பலகையை சேமியுங்கள்

     

    குறிப்பு

    • புதிய ப்ளாக்கர் பதிவுகளுக்கு மட்டுமே இந்த பக்கம் உதவும்.

    • ஜனவரி 1, 2007க்கு ்முன்னால் வலைப்பதிவு தொடங்கியவர்கள் மற்றொரு பக்கத்தில் அதற்கான வார்ப்புரு மேம்பாட்டுக் கருவியைப் பயன்படுத்தலாம்.

    • பழைய ப்ளாக்கர் பதிவுகளுக்கும், பழைய ப்ளாக்கர் வார்ப்புரு பயன்படுத்தும் பதிவுகளுக்கும், தமிழ்மணத்தின் உதவிப் பக்கம் பயனுள்ளதாக இருக்கும்.

    • வோர்ட் பிரஸ் பதிவுகளில் கருவிப்பட்டி சேர்க்க கண்ணன் ராமநாதனின் உதவிப் பக்கம்